பெரிய புராணத்தில் வெளிப்படும் பக்தி நெறி
The path of devotion as exposed in Periyapuranam
DOI:
https://doi.org/10.22452/JTP.vol1no1.3Keywords:
Periyapuranam, Devotion, the Four Ways, Soft Love, Extreme Love, பக்தி, வன்பக்தி, மென்பக்தி, சரியை, கிரியை, யோகம், ஞானம், பெரியபுராணம்Abstract
The main objective of this Paper is to bring out the features of Devotion in Periyapuranam. Devotion is the love of the human Soul or Mind with God. The basis of devotion is to sacrifice everything unto God selflessly. This Devotion bridges the intensity of human love and God. Periyapuranam shows two ways of Devotion, namely Extreme Devotion and Soft Devotion. Almost one third of the Nayanmars indulge in extreme, blind love while a majority of the rest engage in Soft Love on God. By the term Soft Love, it refers to the four ways of attaining Godliness, viz., Sariyai, Kiriyai, Yogam and Gnanam. Through the method of discourse and critical analysis, the Philosophy and Concept of Saivaite culture are explained in detail.
Key words: Periyapuranam, Devotion, the Four Ways, Extreme Love, Soft Love.
ஆய்வுச்சுருக்கம்
இவ்வாய்வின் முக்கிய நோக்கம் பெரியபுராணத்தில் வெளிப்படும் பக்தி நெறியை ஆய்ந்து கண்டறிவதாகும். பக்தி என்றால் உயிர் இறைவனிடத்தில் கொள்ளும் அன்பாகும். அனைத்தையும் இறைவனுக்காகவே தியாகம் செய்து தன்னலமற்ற உணைமையான பேரன்பே பக்திக்கு அடிப்படையாகும். உணர்வுப்பூர்வமாக அன்பின் வழி இறைவனை வழிபட்டு மனிதனை இறைவனோடு இணைக்கும் உறவுப் பாலமாக விளங்குவது பக்தி. பெரியபுராண பக்தி நெறி வன்பக்தி, மென்பக்தி என்ற இரு நிலைகளில் விவாதிக்கப்பட்டுள்ளன. வன்பக்தியில் 33.3 சதவிகித நாயன்மார்களும் மென்பக்தியில் 66.7 சதவிகித நாயன்மார்களும் ஈடுபட்டுள்ள விவரங்கள் கிடைக்கப்பெற்றன. மென்பக்தியின் அங்கமாக சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நாற்பதங்களின்வழி விவாதங்கள் முன்னிருத்தப்பட்டுள்ளன. விளக்கமுறை பகுப்பாய்வின் மூலம் கருத்துகள் விமர்சன உத்தி முறையில் விவாதிக்கப்பட்டுள்ளன. சைவசித்தாந்தக் கோட்பாடுகளும் பண்பாட்டுக் கோட்பாடுகளும் கருத்துகளை விவரிக்கக் கையாளப்பட்டுள்ளன.
குறிப்புச் சொற்கள்: பக்தி, வன்பக்தி, மென்பக்தி, சரியை, கிரியை, யோகம், ஞானம், பெரியபுராணம்.